திறமையில் நம்பிக்கை!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema_312.jpg)
விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான "மகாராஜா' திரைப்படத்தின் வெற்றியால் மகிழ்சியடைந்துள்ள விஜய் சேதுபதி, இனி தரமான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பேன் என முடிவெடுத்திருக்கிறார். அதன்படி பல இயக்குநர்களிடம் கதைகேட்டு "பசங்க' படத்தை இயக்கிய பாண்டிராஜை ஒப்பந்தம் செய்திருக்கிறார். நாயகியாக நித்யா மேனன் நடிக்கிறார். நித்யா மேனன் திறமை மீது நம்பிக்கை வைத்து அவரை விஜய்சேதுபதி பரிந்துரைத்தாராம். ஏற்கனவே மலையாள படமான 19 (1)(a)ல் இவர்கள் இணைந்து நடித்திருந்தனர்.
அடுத்து... கைதி 2!
சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே, உச்ச நடிகர்களை வைத்து படம் இயக்கிக்கொண்டிருப்பவர் லோகேஷ் கனகராஜ். ‘"மாநகரம்'’ முதல் ‘"விக்ரம்'’ வரை அனைத்து படங்களும் ஹிட்டடிக்க, அவரது "லியோ'’ கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் தற்போது ரஜினியை வைத்து ‘"கூலி'’ படத்தை இயக்கிவருகிறார். இதனிடையே ‘"கைதி 2' எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில்... படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவும், லோகேஷிடம் "கைதி 2’ எப்போது ஆரம்பிக்கும்?' என கேட்க, ‘கூலி’ முடிந்த உடனே ஆரம்பிக்கலாம் என கூறியுள்ளார் லோகேஷ். ‘"கைதி 2'’ எல்.சி.யு (LCU) என்பதால் கார்த்தி, சூர்யா, கமல் என ‘விக்ரம்’, ‘லியோ’ படங்களில் சம்பந்தப்பட்ட கேரக்டர்ஸ் அனைத்தும் ‘கைதி 2வில் இடப்பெறவுள்ளது. ஆனால் விஜய் அடுத்த படத்துடன் அரசியலுக்குச் செல்வதால் அவரின் வாய்ஸை மட்டும் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறார்களாம்
ஹிந்தி படத்தில் சம்யுக்தா!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema1_240.jpg)
தனுஷுக்கு ஜோடியாக "வாத்தி' படத்தில் நடித்த சம்யுக்தா, ‘"மஹாராக்னி'’ படம் மூலம் இந்திக்குச் செல்கிறார். சரண்தேஜ் இயக்கத்தில் பிரபுதேவா, கஜோல் நடிக்கின்றனர். "மின்சாரக் கனவு'’படத்தில் நடித்திருந்த இவர்கள், 27 வருடங் களுக்கு பிறகு மீண்டும் இந்தப் படத்தில் இணைகின்றனர். இவர்களுடன் நஸுருதீன் ஷா, சம்யுக்தா, ஜிஷு சென் குப்தா, சாயாகதம் என பலரும் நடிக்கின்ற னர். இந்தியில் அறிமுகமாவது பற்றி சம்யுக்தா கூறும்போது, "மஹாராக்னி’ படத்தில் கஜோலின் தங்கையாக நடிப்பதில் மகிழ்ச்சி.’ நான் மலையாள நடிகை என்றாலும் தெலுங்கில்தான் அதிகப் படங்களில் நடித்திருக்கிறேன். ஒவ்வொரு படமும் அனுபவம்தான். பாலிவுட்டுக்கு வரும்போது திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அங்கு ஆரோக்கியமான போட்டி அதிகம்'' என்றிருக்கிறார். ‘
எல்லாம் ஜெயமே!
கவின் நடித்த "டாடா'’ படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு. கவினின் கேரியரில் முக்கிய இடம் பிடித்த ‘"டாடா'’ அவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றது. கணேஷ் கே.பாபுவும் த்ருவ் விக்ரம், ஜீவா போன்ற நடிகர்களை வைத்து அடுத்தடுத்த படம் இயக்குவதாகக் கோலிவுட்டில் பேசப்பட்டது. இந்தநிலையில் கணேஷ் கே.பாபு, ஜெயம் ரவிக்கு கூறிய கதை அவருக்குப் பிடித்துப்போக இருவரும் சேர்ந்து படம் பண்ணலாம் என்று ஜெயம் ரவி கணேஷ் கே.பாபுவுக்கு ஓ.கே. சொல்லியுள்ளார்.
புதிய படிப்பு!
நடிப்பைத் தாண்டி, இயக்கம், எழுத்து, தயாரிப்பு, பாடகர் என ஒவ்வொரு துறையிலும் தனக்கென தனி முத்திரை பதித்த கமலுக்கு கலைப்பசியை போலவே தொழில்நுட்பத்தின் மீதும் அடங்காப் பசி இருந்திருக்கிறது. நாம் சமகாலத்தில் கொண்டாடும், பயன்படுத்தும், புரிந்துகொள்ளத் திணறும் பல தொழில்நுட்பங்களைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய தீர்க்கதரிசி கமல். தற்போது அவரின் பார்வை ஏ.ஐ. (Artificial intelligence) பக்கம் திரும்பியிருக்கிறது. தமிழ் சினிமாவில் இருந்து 90 நாட்கள் ப்ரேக் எடுக்கும் கமல், அமெரிக்கா சென்று ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து நன்கு அறிந்த பின்பு ஏ.ஐ தொழில்நுட்பத்தின் உதவியோடு தமிழ்சினிமாவின் புதிய பாய்ச்சலைத் தொடங்கி வைக்க இருக்கிறாராம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-07/cinema-t_3.jpg)